Categories
மாநில செய்திகள்

பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி அக்டோபர் 5 ஆம் வரை ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக நடந்து முடிந்தது. இந்த கலந்தாய்வின் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்குவது குறித்து ஏஐசிடிஇ அறிவித்துள்ளது. கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிமுக வகுப்புகள் நவம்பர் 15 ஆம் தேதிக்குள்ளும், பாட வகுப்புகள் நவம்பர் 30-ஆம் தேதிக்குள்ளும் தொடங்க வேண்டும். கல்லூரிகளில் சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் நவம்பர் 25ஆம் தேதிக்குள் விலகி விட்டால் முழு கட்டணத்தையும் வழங்க வேண்டும். கல்லூரி சூழலுக்கு ஏற்ப நேரடி அல்லது ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |