தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கல்லூரியை பொறுத்தவரை இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் கல்லூரியில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் என்ஜினியரிங் முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் கிடையாது என அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அண்ணா பல்கலை கல்லூரிகளில் என்ஜினியரிங் முதலாமாண்டு மாணவர்களுக்கு வருகின்ற ஒன்றாம் தேதி முதல் 15 நாட்களுக்கு ஒருங்கிணைப்பு பயிற்சி நிகழ்வுகளின் கல்லூரிகளில் நேரடியாக நடத்தப்படும்.அதன் பிறகு அந்த மாணவர்கள் அவரவர் வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்பில் மட்டுமே பங்கேற்க வேண்டுமென்றும் செய்முறைக்கு மட்டும் நேரடியாக அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் ஜனவரியில் இருந்து நேரடி வகுப்புகளுக்கு மாணவர்கள் அழைக்கப்படுவார் என்றும் அண்ணா பல்கலையின் இணைப்புக் கல்லூரிகளில் நவம்பர் 8ஆம் தேதி முதல் ஒருங்கிணைப்பு பயிற்சி நிகழ்வுகள் 15 நாட்கள் நடக்கும் என்றும் அதன் பிறகு அந்தந்த கல்லூரிகள் , தங்களின் விடுதி வசதியைப் பொருத்து நேரடியாக அல்லது ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது அவர் கூறியுள்ளார்