Categories
தேசிய செய்திகள்

பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு….. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

நாடு முழுவதும் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து வகுப்புகளை நடத்த அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் 2022-23 ஆம் கல்வியாண்டில் நாடு முழுவதும் பொறியியல் வகுப்புகளை ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் மூலம் நடத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு, வகுப்புகளை ஆகஸ்ட்..1ம் தேதி முதல் துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு ஜூன் மாதத்தில் முதல்கட்ட கலந்தாய்வை தொடங்கி, ஜூலை 20 (அல்லது) அதற்கு முன்பாக கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் கலந்தாய்வில் காலியாகவுள்ள இடங்களை ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் நிரப்ப வேண்டும் எனவும் நாடு முழுவதும் பொறியியல் வகுப்புகளுக்கான இந்த அட்டவணையை அனைத்து கல்வி நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |