Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பொறுத்துக் கொள்ள முடியாத வலி…. இளைஞரின் அவசர முடிவால்…. கண்ணீரில் குடும்பத்தினர்….!!!!

கடும் வயிற்று வலியால் சமையல் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மேல பூதனூர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ராஜேஷ் சமையல் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

அதனை பொறுத்துக்கொள்ள முடியாத ராஜேஷ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ராஜேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |