ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் மந்திரி அசோக் கெலாட் சட்டமன்றத்தை கூட்ட கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதல்வர் பணியிலிருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி இருந்தார். இதனால் தன் ஆதரவு 19 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சச்சின் பைலட் தனியாக விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் தகுதி நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள ராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகர் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். இதற்கு எதிராக சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் நீதிமன்றத்தை நாடினர். இத்தகைய வழக்கினை விசாரணை செய்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், சச்சின் பைலட், அவரின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆகியோர் மீது எத்தகைய நடவடிக்கை இணையும் எடுக்கக்கூடாது என சபாநாயகர்க்கு உத்தரவு பிறப்பித்த நிதிமன்றம், தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என்று வலியுறுத்தியது.
இந்நிலையில் அசோக் கெலாட் தனது அரசிற்கு இருக்கின்ற பெரும்பான்மையின காட்டுவதற்கு ராஜஸ்தான் சட்டமன்றத்தினை கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தற்போதுள்ள கொரோனா தொற்றால் சட்டமன்றத்தை கூட்டுவதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில், அசோக் கெலாட்டும் அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் ஆளுநர் மாளிகை வளாகத்தில் இருக்கின்ற தோட்டத்தில் காத்திருந்தார்கள். அதுமட்டுமன்றி சட்டமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என எம்.எல்.ஏக்கள் கூச்சல் இட்டனர். இதனைத் தொடர்ந்து அசோக் கெலாட் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.