திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது “நான் திருச்சிக்கு பல முறை வந்துள்ளேன். அதாவது, கட்சியின் அடிப்படை உறுப்பினராக, இளைஞரணி செயலாளராக, எம்எல்ஏவாக வந்திருக்கிறேன். தற்போது முதன் முறையாக அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு வருகை தந்திருக்கிறேன்.
இந்த தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கான எண்ணற்ற நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சியானது பிற மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக திகழ்கிறது. முத்தமிழ் அறிஞரின் பேரனாகவுள்ள பெருமையைவிட உங்களது வீட்டு செல்லப்பிள்ளையாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். பொறுப்பான செல்லப் பிள்ளையாக என்றுமே இருப்பேன் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.