தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று முதலே ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தை திமுகவினர் அடித்து நொறுக்கி சூறையாடி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஜெயலலிதா பெயர் இருக்கிறது என்பதற்காகவே ஏழை மற்றும் எளிய மக்கள் பயன்பெறும் உணவகத்தில் திமுகவினர் இப்படி நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது. ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை ஆரம்பித்துவிட்ட திமுகவினர் அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறார்களோ என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.