சிவசேனா கட்சியின் தலைவர் ஜேபி நட்டா பிரதமர் மோடியிடம் மக்கள் ராஜினமா கேட்பார்கள் என தெரிவித்துள்ளார்.
சிவசேனா கட்சி பத்திரிகையின் சாம்னா கட்டுரை பகுதியில் அந்த கட்சியில் உள்ள எம்.பி. சஞ்சய் ராவத் எழுதி உள்ளதாவது, “நாட்டில் கொரோனா பிரச்சினை காரணமாக 10 கோடி மக்கள் அவர்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து, 40 கோடி குடும்பங்கள் பாதிக்கப்பட்டு, சம்பளம் பெறும் நடுத்தர மக்கள் வேலையை இழந்து இருக்கிறார்கள். தொழில் மற்றும் வர்த்தகம் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு. கொரோனா மற்றும் பொருளாதார பிரச்சினையை தீர்க்க தவறியதால் இஸ்ரேல் மக்கள் அந்த நாட்டு பிரதமருக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்தியாவிலும் அதே நிலை ஏற்பட்டுவிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் வாழ்வாதார பிரச்சினைகளை சரிசெய்யவில்லை என்றால் மோடியிடம் மக்கள் ராஜினாமா கேட்பார்கள்.
ரபேல் போர் விமானம் இந்தியா வந்து சேர்ந்தபோது, அதற்கு அளிக்கப்பட்ட வரவேற்பு வியக்கத்தக்கதாக இருந்தது. ஆனால் இதற்கு முன்பு இந்தியா வந்த சுகாய், மிக் போர் விமானங்களுக்கு இதுபோன்ற கொண்டாட்டங்கள் எதும் இல்லை. அணுகுண்டு மற்றும் ஏவுகணையுடன் பறக்கும் ரபேல் போர் விமானத்தால் வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார பிரச்சினைகளை அழித்து விட முடியாது. 10 கிராம் தங்கம் 51 ஆயிரத்தை நெருங்கி விட்டது. என சஞ்சீவ்வ் ராவத் கூறி உள்ளார். இதுகுறித்து ஜேபி நட்டா கூறுகையில், “மராட்டியத்தில் ஜனதா தனது சொந்த பலத்தில் ஆட்சியை பிடிக்கும், மேலும் பொருளாதார பிரச்சினை, வேலைவாய்ப்பு இன்மை போன்ற பிரச்சினைகளை பற்றி அவர்கள் பேசுவதில்லை” என்று ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.