Categories
சினிமா தமிழ் சினிமா

பொறுமையாய் இருங்கள்…! நயன்-விக்கி வாடகை தாய்…. சூசகமாக சொன்ன விக்கி…!!!!

திரைத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. திருமணமாகி நான்கு மாதங்களில் வாடககை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது. இந்த நிலையில் குழந்தைகள் விவகாரத்தில் விரைவில் பதில் வரும் என்று விக்னேஷ் சிவன் மறைமுகமாக இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

அதில், “எல்லாம் சரியான தருணத்தில் உங்களுக்கு வரும். பொறுமையாய் இருங்கள். நன்றியுடன் இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். நயன்-விக்கி வாடகை தாய் மூலம் 4 மாதத்தில் குழந்தை பெற்றெடுத்துள்ளனர். இதை அவர்கள் முறையாக பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இப்படி ஒரு பதிவை அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |