நாடு முழுவதிலும் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்புவது குறித்து தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும், உத்தரவுக்கும் மத்திய அரசு மதிப்பு அளிப்பதில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி ரமணா மன வருத்தம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு தீர்ப்பாயங்களில் நிறைய இடங்கள் காலியாகவே இருக்கின்றது. இதனை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும், காலஅவகாசம் வழங்கியும் கூட இந்த பணியிடங்களை நிரப்பவில்லை. எனவே இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது கடுமையான அதிருப்தியையும், கோபத்தையும் வெளிப்படுத்திய தலைமை நீதிபதி என்.வி ரமணா எங்களது தீர்ப்புகளுக்கு, உத்தரவுக்கும் மத்திய அரசு மதிப்பு வழங்குவதில்லை என தனது கடுமையான அதிருப்தியை தெரிவித்தது மட்டுமல்லாமல் நாடு முழுவதிலுமுள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்ப ஏன் தயக்கம் எனவும் கேள்வி எழுப்பினார்.
எங்களது பொறுமையை மிகவும் சோதிக்க வேண்டாம் எனவும் அவர் மத்திய அரசை கேட்டுக் கொண்டார். இதற்க்கான பரிந்துரைகள் அளிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும், தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களை மத்திய அரசு இன்னும் நிரப்பாமல் இருப்பது ஏன் என்ற ஒரு கேள்வியையும் எழுப்பியிருக்கிறார். உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதிகள் நியமித்திருக்க மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் தீர்ப்பாயங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் இல்லாமல் நீங்கள் இப்படி ஒரு செயல்படாத ஒரு தீர்ப்பாயங்கள் வைத்திருப்பதற்கு பதிலாக தீர்ப்பாயங்கள் அனைத்தையும் மூடி விடலாம்.அப்படி மூடி விட்டால் அதற்கான மாற்று ஏற்பாடு என்ன ? இந்த தீர்ப்பாயங்கள் இயங்குவது சம்பந்தமான சட்டங்கள் அனைத்தையும் நீக்கி விடலாம் என்ற பல்வேறு கேள்விகளையும் கோபமாக கேட்டு இருக்கிறார்.
செப்டம்பர் 13-ஆம் தேதி வரை கடைசியாக உங்களுக்கு கால அவகாசம் வழங்குகிறோம். அப்படி இல்லை என்றால் நாங்களே அந்த பணியை செய்ய வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கையையும் நீதிபதிகள் எடுத்துரைக்கின்றார். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப் பட்டிருக்கின்றது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இது சம்பந்தமாக மத்திய அரசுக்கு தகவல்களை சொல்கிறோம் என்று கூறினார்.
அப்போது மீண்டும் கோபமடைந்த தலைமை நீதிபதி, நீங்கள் தகவல் எல்லாம் சொல்ல வேண்டாம். நிறைய பிரச்சனைகள் இந்த கம்யூனிக்கேஷனில் இருக்கிறது. உடனடியாக எங்களது தீர்ப்பை செயல்படுத்த கூடிய வேலையை பாருங்கள் என்று கோபமாக சொல்லி வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறார்கள்.