பொலிவியா பல்கலைக்கழகத்தில் பால்கனியில் கூட்டமாக மாணவர்கள் நின்று கொண்டிருந்த நிலையில் தடுப்புக் கம்பி உடைந்ததால் 5 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர்.
மேற்கு பொலிவியாவில் உள்ள ‘பப்ளிக் யூனிவர்சிட்டி ஆப் எல் ஆல்டோ’ என்ற பல்கலைக்கழகத்தில் நிதித்துறை அறிவியல் கட்டிடத்தில் கூட்டமாக மாணவர்கள் பால்கனியில் நின்று உள்ளனர் .அப்போது திடீரென்று பால்கனியின் தடுப்பு உடைந்ததால் 8 மாணவர்கள் கீழே விழுந்தனர். அதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்து 3 மாணவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து உள்ளனர் .
இந்தக் கோர சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.