இந்த ஆட்டத்தை குறித்து இந்திய வீரர் ஹிட்மேன் சர்மா கூறியதாவது, ICC T 20 உலக கோப்பை போட்டிக்கு இன்னும் பல நாட்கள் உள்ளது. இதனால் இந்திய அணியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம்.அதைவிட வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான T 20 தொடரை வெல்வதில் கவனம் செலுத்துகிறோம். இந்த தொடரை வெல்வதன் மூலம் உலக கோப்பை T 20 போட்டியில் வெற்றி பெற நம்பிக்கை ஏற்படும்.
வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு பொல்லார்ட் தலைமை ஏற்ற பின்பு முற்றிலும் மாறுபட்ட அணியாக மாறியுள்ளது. இதனால் சிறந்த வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் உள்ளார்கள். நாங்கள் இருவரும் ஐ.பி.எல் போட்டியில் ஒரே அணியில் விளையாடிஉள்ளோம். எனக்கு அவரை பற்றி நன்றாக தெரியும். சிறந்த கேப்டனான பொல்லார்ட் கிரிக்கெட் பற்றி அதிக நுணுக்கங்களை அறிந்தவர். இவர் புத்திசாலித்தனமான வீரர் என்றும் ரோகித் சர்மா புகழ்ந்து கூறியுள்ளார் .