Categories
கிரிக்கெட் விளையாட்டு

பொளந்து கட்டிய இந்தியா….! அஸ்வின் சுழலில் சுருண்ட இங்கிலாந்து …!!

இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸ்சில் அஸ்வின் சுழலில் இங்கிலாந்து அணி சுருண்டது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.இதில்  இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா 161 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடினார். இதனைத் தொடர்ந்து விராட் கோலி ,சுப்மான்  கில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர் .துணை கேப்டனான ரஹானே 67 ரன்கள் எடுத்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 88 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்துள்ளனர்.

இரண்டாவது நாள் ஆட்ட தொடக்கத்தில் அக்சர் பட்டேல் முதல் ஓவரில் ஆட்டமிழந்தார் அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்தாலும் ஆட்ட  நாயகனான ரிஷப் பண்ட் அரைசதம் அடித்து நிதானமாக ஆடினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்ததால் இந்திய அணி 95.5 ஓவர்களில் 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது .ரிஷப் பண்ட் மட்டும் ஆட்டமிழக்காமல் களத்தில் 58 ரன்களுடன் இருந்தார் .இதனை தொடர்ந்து இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை பேட் செய்தது .

இங்கிலாந்து அணி உணவு இடைவேளை வரை 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.  இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 4 விக்கெட்களை இழந்து பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களுடன் களத்தில் இருந்தார். தொடர்ந்து பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி இங்கிலாந்து அணியின் அணைத்து விக்கெட்களையும் வீழ்த்தியது. இங்கிலாந்து அணி 59.5 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்து.

அதிகபட்சமாக பென் போங்க்ஸ் ஆட்டமிழக்காமல் 42ரன்னும், ஓலி போப் 22 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும் , இஷாந்த் சர்மா, அக்சர் படேல் தலா 2  விக்கெட்டுகளையும், சிராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். இதன் மூலம் இந்திய அணி 223 ரன்கள் முன்னிலை பெற்றது.

Categories

Tech |