Categories
கிரிக்கெட் விளையாட்டு

பொளந்து கட்டிய ரோஹித், கே.எல் ராகுல்…. இந்தியா அசத்தலாக வென்று…. தொடரை கைப்பற்றியது …!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களாக களமிறங்கிய மார்ட்டின் கப்தில் – டேரில் மிட்செல் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர் .

இதில் அதிகபட்சமாக மார்ட்டின் ,டேரில் மிட்செல் இருவரும் தலா 31 ரன்னும், கிளென் பிலீப்ஸ் 34 ரன்னும் எடுத்தனர் . இந்திய அணி தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய  ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட் கைப்பற்றினார் .அடுத்ததாக புவனேஷ்வர் , தீபக் சாஹர் , அக்சார் பட்டேல் மற்றும்  அஸ்வின்ஆகியோர் தலா ஒரு விக்கெட்  கைப்பற்றினர் .தற்போது களமிறங்கியுள்ள இந்திய அணி 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

தொடக்க ஜோடிகளாக களமிறங்கிய கே.எல் ராகுல், கேப்டன் ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 17.2ஓவர்களில் 3விக்கெட் இழப்பிற்கு 155 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்று தொடரை 2-0 என வென்றது. எஞ்சிய ஒரு போட்டி மட்டுமே உள்ளதால் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இந்த தொடர் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |