Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பொளந்து கட்டிய ஸ்ரேயஸ்….. மிரட்டிய ஹூடா….. 189 ரன்கள் இலக்கு…. எட்டுமா WI..!!

ஸ்ரேயஸ் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்று 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில்லில் இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் விளையாடவில்லை. ஹர்ஜித் பாண்டியா கேப்டன் பொறுப்பேற்றுள்ளார்.. அதன்படி தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்கினர். இந்திய அணி நல்ல தொடக்கம் கொடுத்து நிலையில் இசான் கிஷன் 11 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதை அடுத்து தீபக் ஹூடா உடன் ஷ்ரேயஸ் ஜோடி சேர்ந்தார்.

 

இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.  ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் கடந்தார். 11ஆவது ஓவரில் 100 ரன்களை கடந்தது இந்தியா.. ஷ்ரேயஸ் அதிரடியாக ஆடிவந்தார். இந்த சூழலில் அதிரடியாக ஆடி வந்த ஹூடா 24 பந்துகளில் 38 ரன்கள் (3 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்திருந்த நிலையில்  வால்ஷ் பந்து வீச்சில் ப்ரூக்ஸிடம் கேட்ச் கொடுத்து  ஆட்டமிழந்தார்.

 

அதைத்தொடர்ந்து மிரட்டி வந்த ஷ்ரேயஸ் ஐயரும் 13ஆவது ஓவரில் 40 பந்துகளில் 64 ரன்கள் (8 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்த நிலையில் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்..  இதையடுத்து  சாம்சனும், கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் இணைந்தனர். ஆட்டத்தின் 15ஆவது ஓவரில் 3 பந்துகள் வீசப்பட்ட நிலையில் ஆட்டம் சிறிது நேரம் மின்னல் காரணமாக நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. சஞ்சு சாம்சனும் பாண்டியாவும் மைதானத்திற்குள் வந்த நிலையில், 16ஆவது ஓவரில் சாம்சன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்..

இதையடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 17ஆவது ஓவரில் 2 பவுண்டரி அடித்து மிரட்டினார்.. ஆனால் அவர் நிலைக்கவில்லை. ஓடியன் ஸ்மித்தின் அடுத்த 18ஆவது ஓவரில்  எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். ஹோல்டரின் 19ஆவது ஓவரில் பாண்டியா 2 சிக்ஸர், 1 பவுண்டரி விளாசினார். கடைசி ஓவரில் அக்சர் பட்டேல் பேட்டிங் செய்ய, எதிர்திசையில் நின்ற ஹர்திக் ஓட முயல ஸ்டெம்பை எறிந்தார் ஓடியன் ஸ்மித்..

இதனால் ஹர்திக் 28 (16) ரன்களில் வெளியேறினார். அந்த ஓவரில் 2ஆவது பந்தில் 1 சிக்ஸர் அடித்து மிரட்டிய அக்சர் (9 ரன்கள்) 4 ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 188 ரன்கள் குவித்தது.. குல்தீப் 0 ரன்களுடனும், ஆவேஷ் கான் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஓடியன் ஸ்மித் 3 விக்கெட் வீழ்த்தினார்..

Categories

Tech |