Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் மற்றும் திமுக தலா 3 முறை வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக 9 முறை தொகுதியை கைப்பற்றி உள்ளது. தற்போதய எம்எல்ஏ அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன். பொள்ளாச்சி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,25,777 ஆகும். பொள்ளாச்சியில் தென்னை நலவாரியம் அமைக்க வேண்டும். இளநீருக்கு 25 ரூபாயும், தேங்காய்க்கு 30 ரூபாயும் ஆதரவு விலையாக நிர்ணயிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

பொள்ளாச்சி சந்தையில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்பது நீண்டகாலமாக கோரிக்கை ஆகவே இருக்கிறது. பாதாள சாக்கடை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டும் மக்கள் பல இடங்களில் சேதமடைந்துள்ளதால் விபத்துகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். சுற்றுவட்டார சாலை பணிகள் முடிவடையாததால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாகவும் புகார் கூறுகின்றனர்.

அரசு பொறியியல் கல்லூரி ஏற்படுத்தவேண்டும் என்றும் மக்கள் கூறுகின்றனர். மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமித்து தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். தென்னை நார் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்க வேண்டும் என்றும், தென்னை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |