பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 9 பேரும் காணொளி மூலம் இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது இந்த வழக்கு விசாரணையானது அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை 8 இளம் பெண்கள் புகாரளித்துள்ளனர்.
முன்னதாக பொள்ளாச்சி பாலியல் வழக்கு அடுத்த 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு 5 பேரும், கடந்த ஜனவரி மாதம் அதிமுக பிரமுகர் ஒருவர் உட்பட மூவரும் கைது செய்யப்பட்டு இருந்தார்கள்.. கடந்த மாதம் கூட இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையானது அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது..