பொள்ளாச்சியைச் சேர்ந்த ஜெ.கிருஷ்ணகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்ககில் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகே பல்லடம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பாலக்காடு செல்லும் நெடுஞ்சாலை ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நெடுஞ்சாலைத் துறை தரப்பில் 8 வாரங்களில் ஆக்கிரமிப்புகள் ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இதனை ஏற்ற நீதிபதிகள் சம்பந்தபட்டவருக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு அளித்து அதன் பின்னர் ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.