Categories
மாநில செய்திகள்

பொழுதுபோக்கு பூங்கா – வழிகாட்டு நெறிமுறைகள்

நாடு முழுவதும் வரும் 15-ஆம் தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். கர்ப்பிணிகள் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு பூங்காவில் அதிகளவு பார்வையாளர்களை அனுமதிக்ககூடாது என்றும். பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள நீச்சல் குளங்கள் செயல்பட தடை தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பூங்காக்களில் உள்ள உணவகங்களில் 50 சதவிகிதம் மட்டுமே உணவருந்த அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு பூங்காவிற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் விற்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வரும் பார்வையாளர்கள் அனைவரும் தேர்மல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும், பூங்காக்களில் கிருமிநாசினி வைக்க வேண்டும் என்றும், வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |