Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

பொழுது போக்கு விளையாட்டு அல்ல.! காளைகள் துன்புறுத்தப்படவில்லை…. ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரி தமிழக அரசு வலியுறுத்தல்.!!

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது..

ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்யவும், தமிழ்நாடு அரசு இயற்றிய ஜல்லிக்கட்டு சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரி பீட்டா உள்ளிட்ட விலங்கு நல அமைப்புகள் தொடரப்பட்ட வழக்குகள் என்பது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கே.எம் ஜோசப்,  அஜய் ரஸ்தோகி, அனிருதா போஸ், சி.டி ரவிக்குமார் உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் கடந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி இறுதி விசாரணை பெற்று, கடந்த டிசம்பர் 8ஆம் தேதி விசாரணை அனைத்தும் முடிவடைந்தது. தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற்ற இந்த இறுதி கட்ட விசாரணையினுடைய அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நீதிபதிகள் அன்றைய தினம் அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தர பிறப்பித்தனர். அந்த வகையில் இன்று தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், காளைகளின் உயிர் நல்வாழ்வை உறுதி செய்யும் விதமாக விதிமுறைகள் கடைபிடித்து ஜல்லிக்கட்டு நடக்கிறது. ஜல்லிக்கட்டு என்பது பொழுதுபோக்கிற்காக  நடத்தப்படும் விளையாட்டு அல்ல, அது மட்டுமில்லாமல் ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிப்போன விளையாட்டாக இருக்கிறது. காலம் காலமாக விவசாயத்தையும், விவசாயத்தோடு ஒன்றிப்போன காளைகளை பெருமைப்படுத்தவும் கௌரவிக்கவும் நடத்தப்படும் விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு என தனது எழுத்து பூர்வமான வாதத்தில் விளக்கி உள்ளது.

தமிழக அரசை பொறுத்த வரை ஜல்லிக்கட்டு என்பது நடத்துவதற்கான ஐயப்பாடுகள் எதுவும் நீதிபதிகளிடம்  இருக்கக் கூடாது என்றும், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் உடைய வாழ்வோடு ஒன்றி போனது. எனவே தமிழ்நாடு அரசு அதன் காரணத்திற்காக தான் ஜல்லிக்கட்டை விளையாடுவதற்காக விதிமுறைகள் வகுக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியாளர்கள் தலைமையில் அவர்களின் மேற்பார்வையில் தான் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் அனைத்து தரப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிறகுதான் இந்த ஜல்லிக்கட்டு என்பது நடத்தப்படுகிறது.

ஜல்லிக்கட்டு அவிழ்த்து விடப்படும் காளைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் காளைகள் ஒருபோதும் துன்புறுத்தப்படவில்லை, கொடுமைப்படுத்தப்படவில்லை. ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் இந்த அமைப்புகளை பொருத்தவரை ஜல்லிக்கட்டு அவிழ்த்து விடப்படும் காளைகள் கொடுமைப்படுத்தப்படுகிறது, துன்பப்படுத்தப்படுகிறது என்று வாதங்கள் முன்வைத்திருக்கிறது. அந்த வாதங்களை நீதிபதிகள் ஏற்க கூடாது. தமிழக அரசு இதுபோன்ற காரணத்திற்காக தான் சரியான சட்டத்திருத்தத்தை கொண்டு வந்து பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு என்பது தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது..ஜல்லிக்கட்டு சட்டம் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

எனவே தமிழக அரசால் கொண்டுவரப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு சட்ட திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்துள்ள வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தொடர்ந்து  காலம் காலமாக நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டை தமிழ்நாட்டில் நடந்ததுவதற்கான அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து தனது எழுத்தபூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளது. கடந்த 8ஆம் தேதி தீர்ப்பை வைத்த நீதிபதிகள் உத்தரவின் பேரில் தான் இன்று தமிழக அரசு தனது எழுத்து பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளது. மற்றவர்களும் விரைவில் தங்களது எழுத்துபூர்வமான வாதத்தை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பை பொறுத்தவரை ஜனவரி மாதம் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்..

Categories

Tech |