Categories
மாநில செய்திகள்

போகலூர் சுங்கச் சாவடியில் அடிப்படை வசதிகளின்றி கட்டணம் வசூல் – மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

போகலூர் சுங்கச் சாவடியில் அடிப்படை வசதிகளின்றி கட்டணம் வசூல் செய்யப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள சில சுங்கச்சாவடிகளில் கடந்த சில வருடங்களாகவே பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். கட்டணங்கள் அதிக அளவில் வசூலிக்கப்பட்டாலும், போதிய வசதிகள் சாலைகளில் செய்து தரப்படவில்லை என்றும் புகார்கள் அவ்வவ்போது எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் சாலை முழுமையாக அமைக்கப்படும் முன் சுங்கக்கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. பரமக்குடி – ராமநாதபுரம் சாலையில் உள்ள போகலூர் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூல் செய்ய தடை கோரி வழக்கறிஞர் முகமது ரஃபி மனு தாக்கல் செய்திருந்தார்.

சாலைப்பணி முழுமையாக முடியாமலேயே சுங்கக்கட்டணம் வசூலிப்பதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மனு மீது இன்று விசாரணை நடந்த நிலையில் இதுகுறித்து மத்திய அரசும், சுங்கச் சாவடியில் பணம் வசூல் செய்து வரும் கே.என்.ஆர். நிறுவனமும் பதில் தர நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Categories

Tech |