உத்திர பிரதேச மாநிலம் லக்னோ பகுதியில் உள்ள பள்ளி ஆசிரியர் ஒருவர் பணியிட மாற்றம் செய்து பள்ளியை விட்டுப் போகும் பொழுது அவருடைய பிரிவை ஏற்க முடியாத பள்ளியின் மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் காண்பொரின் நெஞ்சை நெகிழ செய்தது. இந்த ஆசிரியர் மாணவர்களுக்கு நல்லதொரு தோழனாக அவர்களுடைய ஒரு ஹீரோவாக இருந்துள்ளார்.
திடீரென வந்த பணியிட மாற்றத்தை ஏற்று அவர் தன்னுடைய கடைசி நாள் பணியை முடித்து புறப்பட தயாராகும் பொழுது அந்த ஆசிரியர் இனி தங்களுக்கு பாடம் எடுக்க மாட்டார். இனி அவரிடம் பேச முடியாது என்பதை தாங்கிகொள்ள முடியாத மாணவர்கள் பலர் அவர் பின்னாடியே நடந்து சென்று அதன் பின் அழுதபடி அவருக்கு பிரியாவிடை அளித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
एक स्कूल शिक्षक के स्थानांतरण के बाद विदाई. pic.twitter.com/1PQg0b1mCL
— Awanish Sharan 🇮🇳 (@AwanishSharan) July 15, 2022