Categories
மாநில செய்திகள்

போகி பண்டிகை… இதையெல்லாம் எரிக்க தமிழக அரசு தடை…!!!

தமிழகத்தில் போகி பண்டிகையின் போது சில பொருட்களை எரிப்பதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது

தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் சார்பில் புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் எல்இடி விழிப்புணர்வு வாகனங்களை மாசு கட்டுபாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் தொடங்கி வைத்து உறுதி மொழி ஏற்று கொண்டனர். அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த மாசு கட்டுபாட்டு வாரியத்தின் தலைவர், இறைவன் அளித்துள்ள இயற்கை வரங்களில் காற்றும், நீரும் முக்கியமான ஒன்று. எனவே, நீரையும், காற்றையும் பாதுகாப்பது நமது இன்றியமையாத கடமையாக உள்ளதால் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பண்டிகை காலங்களில் காற்று, நீர் மாசடைவது பல ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது, குறிப்பாகப் போகிப் பண்டிகையின்போது தேவையற்ற பொருட்களை எரிப்பதால் பெருமளவு காற்று மாசு ஏற்படுகிறது. டயர், ரப்பர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களைப் போகிப் பண்டிகையின்போது எரிக்க வேண்டாமெனப் பொதுமக்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வேண்டுகோள் விடுத்த அவர், தேவையற்ற பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் அளிக்க வேண்டுகோள் வைத்தார்.

உள்ளாட்சி அமைப்புகள் அதைத் தரம் பிரித்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கும், பொது மக்கள் போகி பண்டிகை அன்று தேவையற்றப் பொருட்களை எரிக்காமல் கண்காணிக்க சென்னையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 37 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் என்பதால் அபராதம் ஏதும் விதிக்காமல் விழிப்புணர்வு வாயிலாகக் காற்று மாசு ஏற்படுத்துவதை தடுத்து வருகிறோம். கொரோனா காலங்களில் வாகன போக்குவரத்து பெருமளவு குறைந்துள்ளதால் காற்று மாசு

Categories

Tech |