போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் சாலையோரங்களில் கடைகள் அதிகமாக உள்ளதால் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை போக்குவரத்திற்கு இடையூறு அளிக்கும் வகையில் நிறுத்தி விடுகின்றனர். இதனால் நகரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகின்றது. போக்குவரத்து காவல்துறையினர் பலமுறை எச்சரித்தும் சம்பத்தப்பட்டவர்கள் வாகனங்களை எடுப்பதில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தால் அதன் சக்கரங்களை போக்குவரத்து காவல்துறையினர் பூட்டி போட்டு விடுவார்கள். அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் அபராதம் செலுத்திய பின்னரே அந்தப் பூட்டை திறந்து வாகனங்களை விடுவார்கள். இதே போன்று அரியலூர் மாவட்டதிலும் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் வாகனங்களை காவல்துறையினர் பூட்டு போட்டு வடுகின்றனர்.