நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இறப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்று முதல் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து அரசு அரசு பேருந்து ஓட்டுனர்களும் நடத்துனர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் அவ்வாறு எடுத்துக் கொள்ளவில்லை என்றால் சிறப்பு விடுமுறை அளிக்கப்படாது என்ற தகவல் வெளிவந்தது. இதையடுத்து அனைத்து அரசு பேருந்து ஓட்டுநர்களும், நடத்துனர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தும் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று போக்குவரத்து செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.