வேலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாசாலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது என புகார் வந்ததையடுத்து அகற்றப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாசாலை பழைய மார்க்கெட் பகுதி தொடங்கி காவல் நிலையம் வரை உள்ள இடங்களை ஆக்கிரமித்து தள்ளுவண்டிகளில் பல கடைகளை வைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மாநகராட்சி மேயர் சுஜாதாவுக்கு புகார்கள் சென்றுள்ளது.
இதனால் அவர் அதிகாரிகளுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டதன் பேரில் இளநிலை பொறியாளர் மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு நேற்று சென்று நடவடிக்கை எடுத்தார்கள். ஆக்கிரமித்திருந்த 25-ற்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகளை அகற்றினார்கள். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் இருந்த டயர்களின் காற்று அகற்றப்பட்டது. இதனால் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.