சீர்காழி நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித் திரிவதால் அடிக்கடி வாகனங்களுக்கு விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் காயம் அடைந்து விடுகின்றனர்.
சுற்றித் திரியும் மாடுகள் சாலையின் குறுக்கே திடீரென ஓடுகின்றது. மேலும் நாய்கள் வாகனங்களில் செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட துறையினர் சீர்காழி நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தவும் கால்நடைகளை சுற்றி திரியவிடும் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.