Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போக்குவரத்துக்கு ஏற்படும் இடையூறு…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…. ஆக்கிரமிப்புகள் அகற்றம்….!!

சாலைகளில் போக்குவரத்து இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சியினர் அகற்றியுள்ளனர்.

நெல்லையில் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படும் வகையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் பேனர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நெல்லை டவுன் வடக்கு ராஜ வீதி, கீழ ராஜவீதி சாலையில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மேலும் சாலைகளில் வைக்கப்பட்ட பேனர்களையும் மாநகராட்சி பணியாளர்கள் அகற்றியுள்ளனர். இந்த பணிகள் மாநகர நகர்நல அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

Categories

Tech |