Categories
சினிமா தமிழ் சினிமா

போக்குவரத்துக்கு விதியை மீறி செயல்பட்டார்….. பிரபல நடிகருக்கு அபராதம்….!!!!

போக்குவரத்து விதியை மீறிய பிரபல நடிகருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

ஹைதராபாத்தில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம் விதித்தும், கார் கண்ணாடியில் ஒட்டப்பட்டு இருக்கும் கருப்பு பிலிம்களை நீக்கியும் வருகின்றனர். இதில் பிரபல நடிகர்களின் வாகனங்களும் மாட்டிக்கொள்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் கார் கண்ணாடியில் கருப்பு பிலிம் ஒட்டப்பட்டிருந்தது. இதை நீக்கிய போக்குவரத்து காவல்துறையினர் அவருக்கு அபராதம் விதித்தனர்.

இதேப்போன்று நடிகர் அல்லு அர்ஜுன், கல்யாணராம் ஆகிய  நடிகர்களின் கார்களிலும் கருப்பு பிலிம்கள் ஒட்டப்பட்டிருந்தது. இதையும் போக்குவரத்து காவல்துறையினர் நீக்கி அவர்களுக்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில் பிரபல நடிகர் குஞ்சு மோகன் போக்குவரத்து விதிகளை மீறியுள்ளார். இதன் காரணமாக போக்குவரத்து காவல்துறையினர் இவருக்கு 700 ரூபாய் அபராதம் விதித்து, இவரின் கார் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த கருப்பு பிலிமையும் நீக்கினர்.

Categories

Tech |