Categories
மாநில செய்திகள்

போக்குவரத்துக் கழகத்திற்கு….. பொங்கலோ பொங்கல்…..!!!!!

தமிழர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல். இது தமிழர்களுக்கு மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் மக்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் கொண்டாட செல்வது வழக்கம். அதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இந்தமுறையும் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோன்று கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களிலிருந்தும் பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளை அரசு இயக்கியது.

இந்நிலையில் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய விரும்பாத அவர்களின் வசதிக்காக சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து தொலைதூர இடங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11,12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக ஒரு நாளைக்கு 18,232 தினசரி பேருந்துகளுடன் 1,514 சிறப்பு பேருந்துகள், 2 கோடியே 57 லட்சம் கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்கப்பட்டு 3 கோடியே 22 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இதன் மூலம் 65 கோடியே 58 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. தினமும் கூடுதலாக1,231 தினசரி பேருந்துகளும் 201 சிறப்பு பேருந்துகளும் 28 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டு 96 லட்சம் பயணிகள் அதிகமாக பயணம் செய்ததன் மூலம் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது. மேலும் பொங்கலுக்கு பின்னர் அதாவது  15,17 ,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக ஒரு நாளைக்கு 17,164 தினசரி பேருந்துகள் ,2 கோடியே 94 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட்டு, 3 கோடியே 50 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இதன் மூலம் 72 கோடியே 49 லட்சம் ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டைவிட 1,271 தினசரி பேருந்துகள் இயக்கப்பட்டதன் மூலம் 1 கோடியே 70 லட்சம் பயணிகள் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒட்டுமொத்தமாக 7 கோடி பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் சுமார் 138 கோடியே 7 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |