சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து சேவையானது இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு 4 ஆண்டுகள் ஆகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணத்தால் சர்வதேச அளவில் விமான சேவை முழுவதுமாக முடங்கியிருக்கின்றது. அதனால் சென்ற வருடம் ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போதைய ஆண்டில் உள்ளூர் விமான போக்குவரத்து சேவை 86.5 சதவீதமும், சர்வதேச விமான போக்குவரத்து சேவை 97 சதவீதமும் குறைந்து இருப்பதாக கூறியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் 2023 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது 2024 ஆம் ஆண்டு வரை இத்தகைய நிலை தொடரலாம் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தகவல் அளித்துள்ளது.