தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை, அரசால் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 13வது ஊதிய ஒப்பந்தம், கடந்த 2019 ஆம் வருடத்தில் முடிந்தது. ஆனால் அதற்கு முன்பாக 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தியிருந்தால் 2,000 முதல் ரூ.5,000 வரை ஊதிய உயர்வு கிடைத்திருக்கும். கடந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒப்பந்த பேச்சு நடக்கவில்லை.
இதனையடுத்து சட்டசபை தேர்தலில் முக ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., ஆட்சி அமைத்த நிலையில் 6 மாதங்களாகியும் ஊதிய ஒப்பந்த பேச்சு தொடங்கவில்லை. எனவே கூட்டணி கட்சி தொழிற்சங்கத்தினரே போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், 14வது ஊதிய ஒப்பந்த பேச்சு அமைச்சர் ராஜ்கண்ணப்பன் தலைமையில் இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற உள்ளது.