நாடு முழுவதும் விலைவாசி அதிகரிப்பை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் இரண்டு நாட்கள் பொது வேலைநிறுத்தம் அறிவித்திருந்தது.
அந்தவகையில் திட்டமிட்டபடி கடந்த 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழர்கள் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களும் பங்கேற்றுக் கொண்டனர். அதேபோல் வங்கி, எல்ஐசி உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. இந்த வேலை நிறுத்தத்திற்கு மாநில தொழிற்சங்கங்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தால் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்து போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தால் சம்பளம் கிடையாது என தமிழக அரசு அறிவித்திருந்தது, அதையும் பொருட்படுத்தாமல் தொழிற்சங்கத்தினர் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இதில் தொமுச., சிஐடியு., ஏஐடியுசி., ஐஎன்டியுசி., விடுதலை சிறுத்தை, மதிமுக உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். அண்ணா தொழிற்சங்கத்தினர் மட்டும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பஸ்களை இயக்கியுள்ளனர்.
அதனால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு “நோ வேர்க் நோ பே” என்கிற அடிப்படையில் சம்பள பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த மாதத்திற்கான சம்பளம் மார்ச் 20-ஆம் தேதிக்குள் கணக்கிடப்படுவதால் அடுத்த மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றிவரும் டிரைவர் கண்டக்டர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட உள்ளது. அதனால் அவர்களுக்கு பாதிப்பு இருக்காது எனவும் டிரைவர், கண்டக்டர் தொழில்நுட்ப ஊழியர்கள் தான் பெருமளவில் சைக்கிள் ஈடுபட்டிருப்பவர்கள் சம்பளம் அடுத்த மாதத்தில் பிடித்தம் செய்யப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் அனைத்து போக்குவரத்து கழக அதிகாரிகள் வருகை பதிவேடு பின்பற்றி சம்பளம் பிடித்தம் நடவடிக்கை எடுக்க இருக்கின்றனர். தமிழகத்தில் ஒரு லட்சம் பஸ் தொழிலாளர்கள் மீது சம்பள பிடித்த நடவடிக்கை பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 18 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் நாளில் 90 சதவீதம் பேர் பணிக்கு வரவில்லை. இரண்டாவது நாளில் 26 சதவீதத்தினர் பணிக்கு வரவில்லை. அதன் அடிப்படையில் 15 ஆயிரம் தொழிலாளர்கள் மீது சம்பளப் பிடித்தம் நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.