Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!!

தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் மொத்தம் சுமார் 1.25 லட்சம் பேர் வேலை பார்த்து வருகின்றார்கள். இந்த சூழலில் இவர்களின் 14 வது ஊதிய ஒப்பந்தம் 1.9.2019 ஆம் வருடம் அமலாகி இருக்க வேண்டும் இதற்காக ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெற்றுள்ளது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல முக்கிய அறிவிப்பு பற்றி பேசி உள்ளார். அதில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் அரசு ஓட்டுநருக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூபாய் 2012 ஆகவும் அதிகபட்சமாக 7,981 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு கையெழுத்தாகியுள்ளது. அதேபோல நடத்துனருக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 1,965 அதிகபட்சமாக 6,640 க்கு உயர்த்தப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது பற்றி அவர் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் ஓய்வூதிய குடும்பத்தினருக்கு இலவச பயண சலுகை வழங்கப்படும் எனவும் பணியின் போது உயிரிழந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குடும்ப நலநிதி ரூபாய் 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும் எனக்கு கூறியுள்ளார். மேலும் கொரானா காலகட்டத்தில் பணியாற்றிய அனைத்து பணியாளர்களுக்கும் சிறப்பு நிதியாக பணி ஒன்றுக்கு 300 ரூபாய் வழங்கப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

 

 

Categories

Tech |