போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை வெளியீட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றன. இவர்களுக்கு 14 வது ஊதிய ஒப்பந்தம் கடந்து 2019 ஆம் ஆண்டு அமலுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும் அரசுக்கும் உடன்பாடு ஏற்படாததால் அது இழப்பறி ஏற்பட்டு வருகிறது. இதனுடைய ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வுகாலப் பலன்கள் ,மருத்துவ காப்பீடு போன்றவற்றை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரி வருகின்றன.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 325 பனி மனைகளிலும் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களின் 12,000 கோடி செலவு செய்து விட்டனர். ஏழு ஆண்டுகளாக அகவிலைப்படி தரவில்லை என மனக் குறையையும் போக்குவரத்து தொழிலாளர்கள் தெரிவித்திருந்தன. இன்று நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் முழு உடன்பாடு ஏற்படாவிட்டால் போக்குவரத்து கழகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து கழக தொழிலாளர்களின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.