Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து கழகங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டம்…. ராம்தாஸ் முக்கிய கோரிக்கை….!!!!!!!!!

போக்குவரத்து கழகங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மேலும் அரசு போக்குவரத்து கழகங்களின் கட்டமைப்பை மேம்படுத்தி தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பான சேவை வழங்கப்படுவது அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவன ராம் தாஸ் வலியுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை மாநகர பேருந்துகளை படிப்படியாக தனியார் மயமாக்க தமிழக அரசு தீர்மானித்திருப்பதாகவும் அதற்காக உலக வங்கியுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகவும் வெளியாகி இருக்கின்ற செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

சென்னை மாநகர போக்குவரத்து கட்டமைப்பை அடித்தட்டு மக்களிடமிருந்து பறிப்பதற்கு வகை செய்யும் இந்த  நடவடிக்கை எந்த வகையிலும் ஏற்க முடியாததாகும். மேலும் உலக வங்கியுடன் தமிழக அரசு கடந்த 6.12.2021 அன்று கையெழுத்திட்ட சென்னை மாநகர கூட்டமை நீடித்த நகர்ப்புற சேவைகள் திட்டம் எனும் தலைப்பில் ஒப்பந்தத்தின் சில பிரிவுகள் தான் இதற்கு காரணமாகும். இந்த ஒப்பந்தத்தின்படி சென்னையில் போக்குவரத்து, சேவை நடைபாதை கட்டமைப்புகள், பொது இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு போன்றவற்றை மேம்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசுக்கு உலக வங்கி ரூபாய் 12000 கோடி கடன் வழங்குகின்றது.

மேலும் இந்த திட்டத்தின் ஒரு அங்கமாக சென்னையில் மொத்த செலவு ஒப்பந்தத்தின்படி ஆயிரம் பேருந்துகள் புதிதாக வாங்கி இயக்கப்படும். இவற்றை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் இயக்காது அதற்கு மாறாக மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் தேர்ந்தெடுக்கப்படும் தனியார் போக்குவரத்து நிறுவனம்தான் புதிய பேருந்துகளை இயக்கும். புதிய பேருந்துகளை  தனியார் நிறுவனத்தின் ஓட்டுனர் நடத்துனர்கள் தான் இயக்குவர். அவற்றிற்கு மாதம் ஒரு தொகையை போக்குவரத்து கழகம் வாடகையாக செலுத்த வேண்டும். இந்த முறைப்படி 2022 ஆம் வருடத்தில் 500 பேருந்துகளையும் 2024 ஆம் ஆண்டிற்குள் மேலும் 500 பேருந்துகளையும் இயக்குவதற்கு ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட விருப்பத்தை தமிழக அரசும் போக்குவரத்து துறைக்கான கொள்கை விளக்க குறிப்பில் ஒப்புக்கொண்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கை போக்குவரத்து கழகங்களை தனியார் மையமாகும் முயற்சி தவிர வேறு இல்லை. முதலில் சென்னையிலும் அதன் பின் தமிழகத்தின் பிற பகுதிகளில் மொத்த செலவு ஒப்பந்த முறையில் நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளது. முதலில் கூடுதலாக இயக்கப்படும் பேருந்துகளில் மட்டும் இந்த முறை செயல்படுத்தப்படும் அடுத்த கட்டமாக ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் பழைய பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும்போது அதையும் இதே முறையில் இயக்கப்படும். அத்தகைய சூழலில் அந்த பேருந்துகளுக்கான ஓட்டுநர் நடத்துனர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்கள் ரத்து செய்யப்படும் இது மறைமுகமான ஆட்குறைப்பு நடவடிக்கையாகும்.

தமிழக அரசின் இந்த திட்டம் விரிவாக்கப்படும் போது இனிவரும் காலங்களில் அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் புதிய பேருந்துகள் வாங்கப்படாது. புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். மேலும் அரசு போக்குவரத்து கழகங்கள் எனும் பெயரில் தனியார் போக்குவரத்துக்கள் இயக்கப்படும். இந்த பேருந்துகளில் அரசு நிர்ணயத்த கட்டணம் தான் வசூல் செய்யப்படும். இலவச மானிய கட்டண சலுகைகள் தொடரும் என்றாலும் கூட ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அவையும் திரும்ப பெறக்கூடும். மொத்த செலவு ஒப்பந்த முறையை செயல்படுத்துவதன் மூலமாக புதிய பேருந்துகள் அவற்றுக்கான  உதிரி பாகங்கள் வாங்குவதற்கான முதலீடு தேவைப்படாது ஊதிய செலவுகள் குறையும் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகின்றது.

தமிழக அரசு இந்த விளக்கத்தை ஏற்க முடியாது மேலும் தொடக்கத்தில் அரசு போக்குவரத்து கழகங்களின் செலவு குறைவது போலவும் தனியாரின் பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகங்கள் கட்டுப்படுத்துவது போலவும் தோன்றும். ஒரு காலகட்டத்தில் நேரடி அரசு பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்து தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது தனியார் பேருந்து நிறுவனங்கள் வைத்து தான் சட்டம் எனும் நிலை உருவாகும் அது ஆபத்தானதாகும். மாநகர போக்குவரத்து கழகம் உள்ளிட்ட அரசு போக்குவரத்துக் கழகங்கள் நேரடியாக இயங்கும் பேருந்துகளை விட தனியார் மூலம் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது கூடுதல் கட்டணம் வசூலித்தல் போதிய வருவாய் கிடைக்காத வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க மறுத்தல் போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

அப்போது அதை தீர்மானிக்க முடியாமல் அரசு தடுமாற நேரும்.  உலகில் மிகச் சிறப்பான பொது போக்குவரத்து கட்டமைப்பை கொண்டிருக்கும் பெருநகரங்களில் சென்னை மாநகரமும் ஒன்று. 50 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வரும் மாநகர போக்குவரத்து கழகத்தையும் படிப்படியாக பிற போக்குவரத்து கழகங்களையும் தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அரசு போக்குவரத்து கழகங்கள் கட்டமைப்பு மேம்படுத்தி தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பான சேவை வழங்கப்படுவது அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |