Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் நீங்க செய்ய கூடாது…. போக்குவரத்து பணிமனை முன்பு… போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்..!!

நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து கழக தொழிலார்கள் ஒன்று கூடி பணிமனையின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து பணிமனை அமைந்துள்ளது. அந்த பணிமனையின் முன்பு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வார ஓய்வை பறிக்கக்கூடாது, சம்பளம் பறிப்பு செய்யக்கூடாது என்றும் போக்குவரத்து கழக விடுப்பு விதிகளை மாற்ற கூடாது போன்ற பல கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் பிரகாசம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகி செல்வன், சுப்பிரமணி மற்றும் சி.ஐ.டி.யூ நிர்வாகிகள் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.  மேலும் செயலாளர் முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கை விளக்கி பேசியுள்ளார்.

Categories

Tech |