ஊட்டியில் போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க அதிநவீன கேமராக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
பிரதான சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிகள் திகழ்கின்றது. இங்கு வருடம் தோறும் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றார்கள். இதனால் இங்கே அவ்வபோது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.
இதனால் போக்குவரத்தை சீரமைக்கும் வகையிலும் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை தடுக்கும் வகையிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்த போலீசார் முடிவு செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் பேருந்து நிலையம் என 17 இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இது நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.