Categories
தேசிய செய்திகள்

போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவன முதலீட்டாளர்களுக்கு…. தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்….!!!!!!!!

ரிஸ்க்  எடுக்காமல் முதலீடு செய்ய விரும்புவோர் காலம் காலமாக வைப்பு நிதி திட்டங்களில் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சீனியர் சிட்டிசன்கள் பெருமளவில் வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்வது வழக்கமாகும்.  வைப்பு நிதி திட்டங்களில் ரிஸ்க் கிடையாது. வட்டி விகிதத்தின் அடிப்படையில் வருமானம் உண்டு பொதுவாக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் வைப்பு நிதியில் முதலீடு செய்து கொள்ளலாம். எனினும் அதிக வட்டி எங்கு கிடைக்கும் என்பதை பார்த்த பிறகே முதலீடு செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு நல்ல வட்டி வருமானம் தரும் பாதுகாப்பான வைப்பு  திட்டங்களை வழங்கி வருகிறது.

தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் கழகம் தமிழ்நாடு அரசால்  1975 ஆம் வருடம் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உதவுவதற்காக தொடங்கப்பட்டது. வங்கி சாரா நிதி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு ரிசர்வ் வங்கியில் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசு வகுக்கும் நெறிமுறை மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படுகின்றது. இந்த நிறுவனத்தில் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து வைப்பு நிதி பெறப்படுகின்றது. அந்த வைப்பு நிதிகளுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதம் 2 திட்டங்களில் வழங்கப்படுகின்றது. அதாவது மாத வட்டி காலாண்டு வட்டி மற்றும் வருடாந்திர வட்டியாகவும் வழங்கப்படுகிறது. மற்றொரு திட்டமான பணப்பெருக்கு திட்டத்தில் வைப்பீடு முடிவடையும் பொழுது வட்டியுடன் முதலீடு திரும்ப அளிக்கும் திட்டம் இருக்கிறது. மேலும் இங்கு பொது மக்கள் மட்டும் அல்லாமல் நிறுவனங்கள், கூட்டுறவு, கோவில், கல்வி சாலைகள், பல்கலைக்கழகம் நம்பகம் மற்றும் அரசு துறைகளில் வைப்பு நிதி பெறப்பட்டு வருகிறது.

47 வருடங்களாக தொடர்ந்து லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும். இந்த நிறுவனத்தில் இங்கு முதலீடு செய்யப்படும் தொகை பாதுகாப்பானது பத்திரமானதாக என்பதனால் இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வைப்பு  நிதி செலுத்த மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இங்கு குறைந்தபட்ச வைப்பு தொகை  50,000 மாக  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் ஓர் ஆண்டு முதல் ஐந்தாண்டு வரை ஐந்து வகையில் முதலீடு பெறப்படுகின்றது. தற்போது இந்த நிறுவனத்தில் ஒரு வருட கால வைப்பு நிதிக்கு 7% வட்டியும் இரண்டு வருட கால வைப்பு நிதிக்கு 7.25% வட்டியும் மூன்று அல்லது நான்கு வருட கால வைப்பு நிதிக்கு 7.75 % வட்டியும் ஐந்து வருட கால வைப்பு நிதிக்கு 8% வட்டியும் வழங்கப்படுகின்றது. மூத்த குடிமக்களுக்கு 0.25 முதல் 0.50 வட்டி உயர்த்தி வழங்கப்படுகிறது.

மேலும் இந்த நிறுவனத்தில் மூத்த குடிமக்களுக்கு ஐந்து வருடங்களுக்கு சேர்ந்து வட்டியாக 10.46 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. முறையான சான்றிதழ் சமர்ப்பிக்கும் பட்சத்தில் வருமான வரி பிடித்தல் தவிர்க்கப்படுகிறது. ஒரு வருட மாத வட்டியாக ஏழு சதவீதம் முதல் மற்றும் ஐந்து வருடம் முதலீடு பெருக்கிடும் திட்டத்தில் 10.46 சதவித முறை பட்டி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு காலண்டிற்கும் வட்டி அளிப்பதனால் முதலீடு முதிர்வடையும் போது நிகர வட்டி அதிகமாக கிடைக்கின்றது. இங்கு வைப்பு தொகையானது காசோலை மூலமாகவும் RTGS& NEFT மூலமாகவும் முதலீடு செய்யலாம். இந்நிறுவனத்தின் மற்றும் பல தகவல்களை தெரிந்துகொள்ள www.tdfc.in, தொலைபேசி எண் (044) 25333930 மற்றும் இணை மேலாண் இயக்குநர் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

Categories

Tech |