Categories
தேசிய செய்திகள்

போக்குவரத்து வாகன ஆவணங்கள்…. செப்டம்பர் 30 வரை செல்லுபடியாகும்….. அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. அவர்களுக்கு அரசு பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் கொரோனாவும் ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வாகன ஆவணங்கள் ஆன ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்றிதழ் ஆகியவை செப்டம்பர் 30ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் காலாவதியாகும் வாகனங்களின் ஆவணங்கள் செல்லுபடியாகும். இதனால் போக்குவரத்து வாகன ஆவணங்களை நீட்டிக்க நேரில் செல்வதை தவிர்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |