Categories
பல்சுவை

போக்குவரத்து விதிமுறைகள் கண்டுபிடிப்பு…. இவரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா….? இதோ ஒரு சுவாரஸ்யமான தகவல்…!!!

போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை கண்டுபிடித்தவர் குறித்து பார்க்கலாம். கடந்த 1858-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி வில்லியம் ஃபெல்ப்ஸ் ஈனோ என்பவர் பிறந்தார். இவர் சிறுவயதாக இருக்கும்போது தனது தாயுடன் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது திடீரென கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த போக்குவரத்து நெரிசலை எப்படி சரி செய்ய வேண்டும் என்பது யாருக்குமே தெரியவில்லை. அதன்பிறகு நேரம் செல்ல செல்ல தானாகவே போக்குவரத்து நெரிசல் சரியானது. இதுகுறித்து வில்லியம் வீட்டிற்கு சென்று தீவிரமாக யோசித்துக் கொண்டே இருந்துள்ளார். இந்த யோசனைதான் வில்லியமை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை கண்டுபிடிக்க தூண்டியுள்ளது.

இவருடைய கண்டுபிடிப்பு கடந்த 1909-ம் ஆண்டு நியூயார்க் நகரத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவர் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நிறுத்த குறியீடு, போக்குவரத்து வட்டம், தெரு டாக்ஸி ஸ்டாண்ட், பாதசாரி பாதுகாப்பத் தீவுகள், பாதசாரி குறுக்கு வழி, ஒருவழி தெரு போன்றவற்றை கண்டுபிடித்துள்ளார். இவரை போக்குவரத்தின் தந்தை என அழைக்கின்றனர். இவர் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை கண்டுபிடித்தாலும் வில்லியமிற்கு வண்டி ஓட்ட தெரியாது. மேலும் வில்லியம் ஃபெல்ப்ஸ் ஈனோ கடந்த 1945-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி தன்னுடைய 87-ம் வயதில் உயிரிழந்தார்.

Categories

Tech |