விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சாலை பாதுகாப்பு வாரவிழா நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், பூந்தோட்டத்தில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காமராஜர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளிலும் 33வது சாலை பாதுகாப்பு வார விழா தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக நடத்தப்பட்டது. விழுப்புரம் கோட்ட பொறியாளர் ரவி தலைமை தாங்கிய இந்த விழாவிற்கு உதவி கோட்ட பொறியாளர் மனோகரன், உதவி பொறியாளர் வினோதினி, தமிழ்மலர் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.
மேலும் பள்ளி மாணவ மாணவிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அப்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது, போக்குவரத்து விதிமுறை, சைகைகளை பின்பற்றி நடந்தால் சாலையில் ஏற்படும் விபத்தை தடுக்க முடியும். செல்போன் பேசிக்கொண்டு வண்டி ஓட்டக்கூடாது என்றார். மேலும் இருசக்கர வாகனங்கள் ஓட்டும் போது அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், வண்டிகளை அதிவேகமாக ஓட்டிச் செல்ல கூடாது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து மாணவ மாணவிகள் அனைவரும் சேர்ந்து சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.