தெலுங்கு பட உலகில் பிரபல நடிகரான நாகார்ஜுனின் மகன் மற்றும் நடிகரான நாக சைதன்யா டொயோட்டா கார் ஒன்றில் ஐதராபாத்தின் ஜுபிலி ஹில்ஸ் பகுதி வழியாக சென்று இருக்கிறார். அவரது காரை சோதனைச் சாவடியில் வழிமறித்து போக்குவரத்து காவல்துறையினர் சோதனை செய்து உள்ளனர். இவற்றில் அவரது காரில் ஒட்டப்பட்டிருந்த கருப்பு ஸ்டிக்கரை நீக்கும்படி அவரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அவரை ரூ.715ஐ அபராதமாக செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அந்த கருப்பு ஸ்டிக்கரை நீக்கினர்.
அதன்பின் அபராத தொகையை காவல்துறையினரிடம் நாக சைதன்யா கட்டிவிட்டு புறப்பட்டு சென்றார். இதற்கு முன் போக்குவரத்து விதிகளை பின்பற்றாததற்காக ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன், மஞ்சு மனோஜ் மற்றும் நந்தமுரி கல்யாண் ராம் உள்ளிட்ட திரைபிரபலங்கள் காவல்துறையினரிடம் அபராதம் கட்டியுள்ளனர். இந்தியாவில் கார் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது மோட்டார் வாகன சட்டப்படி சட்டவிரோதமாகும். இந்த கருப்பு ஸ்டிக்கரால் காரில் உள்ளது யார் என தெரியாத சூழ்நிலையில், வாகனத்திற்குள் நடைபெறும் மறைமுக குற்றங்களை குறைக்கும் நோக்கில் இதற்கு தடை விதித்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.