சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து போக்சோவில் கைதான குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவர் ஆம்புலன்ஸ் டிரைவராக சேலத்தில் பணியாற்றி வருகிறார் கடந்த ஆண்டு ஜூன் மாதம்,17 வயது சிறுமியை கற்பழித்ததாக அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அசோக்குமார் 8 மாதங்களாக தொடர்ந்து ஜாமீன் கேட்டு வந்துள்ளார் ஆனால் இவருக்கு ஜாமீன் வழங்க மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த அசோக்குமார் நேற்று நள்ளிரவு சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பலமுறை ஜாமீன் கோரியும் கிடைக்காததால் மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து அசோக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது அசோக்குமாரின் தற்கொலை விவகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசாரால் விசாரணை நடத்தப்படுகிறது