புதுக்கோட்டை மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் கைதான வாலிபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பேராம்பூர் பகுதியில் ராஜீவ்காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள ஜவுளி கடைகளுக்கு துணி தைக்கக்கூடிய கார்மெண்ட்ஸ் தொழில் நடத்தி வருகிறார். இவர் கடையில் அப்பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பயிற்சி பெற சேர்ந்துள்ளார். அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி ராஜீவ்காந்தி மூன்று முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர்கள் மகளிர் காவல் நிலையத்தில் ராஜீவ்காந்தி மீது புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கு கோர்ட்டில் நடை பெற்று தீர்ப்புக்கு வந்ததுள்ளது.
அந்த தீர்ப்பில் நீதிபதி டாக்டர் சத்யா கூறியுள்ளதாவது, சிறுமியை பலாத்காரம் செய்ததற்கு ராஜீவ்காந்திக்கு ஆயுள் தண்டனையும், 1 லட்சம் அபராதமும் மேலும் சிறுமியை கடத்தியதாக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க அவர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.