Categories
அரசியல்

“போங்கப்பா நீங்களும் உங்க கூட்டணியும்”…. எங்களுக்கு வெறும் 4 சீட்டு தானா?…. செம டென்ஷனில் விசிக….!!!!

ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான தேவராஜ் தலைமையில் நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது. அதில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் கலந்து கொண்டனர்.

அப்போது ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய 4 நகராட்சிக்கு உட்பட்ட 126 வார்டுகளில் உதயேந்திரம், ஆலங்காயம், நாட்றம்பள்ளி உள்ளிட்ட மூன்று பேரூராட்சிக்கு உட்பட்ட 45 வார்டுகளில் 1 வார்டு என விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மொத்தம் 4 வார்டுகள் மட்டும் ஒதுக்கீடு செய்வதாக அந்த கூட்டத்தில் திமுக முடிவு செய்துள்ளது.

இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆத்திரத்தில் அந்த கூட்டத்தில் இருந்து வெளியேறி விட்டனர். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வாக்குகள் கணிசமாக உள்ள நிலையில் இப்படி திமுக சீட்டுகளை கிள்ளி கொடுப்பதால் தற்போது விசிகவினர் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |