Categories
அரசியல்

போச்சா!…. ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவால்…. நடுநடுங்கும் உடன்பிறப்புகள்….!!!!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து கழகத்தின் மாவட்டச் செயலாளர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.

மேலும் உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் ஒவ்வொருவரும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை என்னால் உணர முடிகிறது. அதேபோல் தோழமை கட்சிகளுக்கான இடங்களை பகிர்ந்தளிப்பது, கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது, வாக்கு சேகரிப்பில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது ஆகியவற்றில் கழக நிர்வாகிகள் மிகுந்த பொறுப்புடன் செயலாற்றிட வேண்டும்” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் ராணுவ வீரர்களை தேர்வு செய்வது போன்ற நெறிமுறைகளுடன் திமுக போட்டியில் உள்ள இடங்களுக்கான கழக வேட்பாளர்கள் தேர்வு நெறிமுறைகள் கட்டுக்கோப்பானதாகவும், கண்டிப்பானதாகவும் இருக்க வேண்டும். மாவட்ட செயலாளர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்களை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டாம் என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |