Categories
உலக செய்திகள்

போச்சு…. போச்சு…. 300ஆண்டு பின்னாடி போச்சு…. அதிர வைத்த புள்ளிவிவரம்… கதிகலங்கியுள்ள பிரபல நாடு …!!

பிரிட்டனில் 300 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மோசமான நிலை இப்போது கொரோனாவால் ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு புள்ளி விவரம் தெரிவித்துள்ளது .

கொரோனாவால் உலகம் முழுவதுமே பொருளாதார வீழ்ச்சியில் தள்ளப்பட்டுள்ளோம். இந்நிலையில் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் கடந்த 2020 இல் ஏற்பட்ட கொரோனா பாதிப்பால் -9.9 சதவீதம்  அளவிலான பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதியில் நெருக்கடி காலகட்டத்தை விடவும், இரண்டு மடங்கு அதிகமாக பாதிப்பை எதிர்கொள்கிறோம் என்று பிரிட்டன் நாடு தெரிவிக்கிறது .

பிரிட்டனில் 300ஆண்டுகளுக்கு முன்பு விவசாயமே முக்கிய வர்த்தகமாக  இருந்த காலகட்டமான 1709ஆம் ஆண்டில் ஏற்பட்ட கிரேட் பிரோஸ்ட்  நிகழ்வால் ஏற்பட்ட பொருளாதார சரிவுக்கு பின் 2020 கொரோனா பாதிப்பு பிரிட்டனில் அதிகமான பொருளாதார சரிவை ஏற்படுத்தி உள்ளதாக தேசிய புள்ளியல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி 2021லும்  கட்டுப்பாடுகள் பிரிட்டன் நாட்டில் இன்னும் பல பகுதிகளில் இருக்கும் . பிரிட்டனில் 3-வது முறையாக ஊரடங்கு அறிவித்ததால் அந்நாட்டு பள்ளிகள், உணவகங்கள் போன்ற அத்தியாவசிய தேவை கூட இல்லாது  அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கிறது. இது அந்நாட்டிற்கு பெரும் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய பகுதிகளில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |