Categories
தேனி மாவட்ட செய்திகள்

“போடி அருகே அடுத்தடுத்து 6 கடைகளில் மர்ம நபர்கள் கைவசம்”…. போலீசார் வலைவீச்சு….!!!!

போடி அருகே அடுத்தடுத்து ஆறு கடைகளில் பணம், பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள போடி அருகே இருக்கும் ரங்கநாதபுரத்தில் உள்ள வணிக வளாகத்தில் செல்போன், ஜவுளி என அடுத்தடுத்து ஆறு கடைகள் இருக்கின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரிகள் தங்கள் கடைகளை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் ஆறு கடைகளில் பூட்டை உடைத்து பணம் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றார்கள்.

மேலும் வணிக வளாகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் திருடி சென்றார்கள். இதையடுத்து நேற்று காலை கடையை திறக்க வந்த வியாபாரிகள் பூட்டு உடைக்க பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்கள். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்கள். பின் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

 

Categories

Tech |