Categories
தேனி மாவட்ட செய்திகள்

“போடி அருகே சீரமைத்து 2 மாதங்களே ஆன மலைப்பாதை உருக்குலைந்தது”…. மக்கள் சிரமம்…..!!!!!

போடி அருகே சீரமைத்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் மீண்டும் மலைப்பாதை உருக்குலைந்துள்ளது.

தேனி மாவட்டத்திலுள்ள போடி அருகே இருக்கும் குரங்கனி மலைப்பகுதியில் முதுவாக்குடி என்ற மலை கிராமம் இருக்கின்றது. இங்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மழை பாதை அமைக்கப்பட்டது. நாலடைவில் இந்த பாதை பராமரிக்கப்படாததால் பல வருடங்களாக உருக்குலைந்து காணப்பட்டது. இதனால் மலை கிராம மக்கள் சீரமைக்க கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு முன்பாக 10 லட்சம் ரூபாய்க்கு மலைப் பாதை சீரமைக்கப்பட்டது.

பாதை சீரமைப்பு பணி நடந்த பொழுது பாதையின் ஓரத்தில் மழைநீர் வடிக்கால் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்திம் மழை நீர் வடிக்கால்  அமைக்கவில்லை. இந்த நிலையில் சென்ற நான்கு நாட்களாக பெய்த கனமழை காரணமாக மலைப்பாதை சேதமடைந்து உருக்குலைந்து காணப்படுகின்றது. சீரமைக்கப்பட்ட பாதை பல இடங்களில் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டு பள்ளமாக காணப்படுகின்றது. இது சீரமைத்து இரண்டு மாதங்களே ஆன நிலையில் தற்போது மீண்டும் உருக்குலைந்து உள்ளது.  இதனால் மக்கள் மீண்டும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்

Categories

Tech |